சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
