இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தைப் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை 8ஆம் தேதிக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது.
சரி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்வது யார்..?!
விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..!

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு தான் இந்த இருமாத நாணய கொள்கையை நடத்துகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், பணப்புழக்கம், வளர்ச்சி, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வட்டி உயர்வு குறித்து முடிவுகளை எடுக்கும்.

நாணய கொள்கை குழு
நாணய கொள்கை குழு என்பது ரிசர்வ் வங்கியின் கீழ் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும், இது நாட்டின் பணவியல் கொள்கையை வடிவமைக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. இக்குழு ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், வங்கி விகிதங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நாணய கொள்கையை மறுசீரமைப்புச் செய்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

ஆறு உறுப்பினர்கள்
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர், மூன்று பேர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுபவர்கள், மற்ற மூவரும் RBI உறுப்பினர்கள். ரிசர்வ் வங்கியின் கவர்னர் எப்போதும் நாணய கொள்கை குழுவின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பார். தற்போது சக்திகாந்த தாஸ் இக்குழுவின் தலைவர்.

4 ஆண்டுப் பணிக்காலம்
மேலும் நாணய கொள்கை குழுவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. உறுப்பினரின் பதவி காலம் குழுவின் முடிவுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் நீட்டிக்க முடியும்.

இரண்டு மாதம்
நாணய கொள்கை குழுவின் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் காரணத்தால் ஒரு வருடத்திற்கு ஆறு முறை நாட்டின் வளர்ச்சி அளவீடுகளைச் சரி செய்ய வாய்ப்பு உருவாகிறது. குறிப்பாகப் பணப்புழக்கத்தைக் குறைக்க இக்கூட்டங்கள் பெரிய அளவில் உதவுகிறது.

வாக்கெடுப்பு
மேலும் நாணய கொள்கை குழுவின் பல்வேறு முடிவுகளை வாக்களிப்பதன் மூலம் ஒப்புதல் பெறப்படுகிறது. 6 பேர் கொண்ட குழு என்பதால் ஒரு முடிவிற்கு 6 இல் 4 பேர் ஒப்புதல் அளித்தால் நிறைவேற்றப்படும்.

வட்டி விகிதம்
தற்போது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது. நாளை துவங்கும் கூட்டத்தில் இந்த வட்டி விகிதத்தில் கணிசமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Why Is RBI Monetary Policy Committee Important?
Why Is RBI Monetary Policy Committee Important? நாணய கொள்கை குழு என்பது என்ன..? ஏன் இக்குழு மிகவும் முக்கியம்..!