பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவை, மாகாண சேவை மற்றும் நிறுவகங்களில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுவரை நிரந்தர நியமனங்கள் கிடைக்கபெறாத பயிலுனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உரிய சேவை நிலையங்களினால் செய்யப்படும் அழைப்புக்களுக்கு இணங்க சேவை நிலையங்களுக்கு பயிலுனர்களை சமூகமளிக்குமாறு செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: