நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.