இந்தியாவின் அண்டை நாடானா சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லி கெக்கியாங் உறுதி தெரிவித்துள்ளார்.
சீனாவில்
குளிர்கால ஒலிம்பிக்
விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழாவில்
பாகிஸ்தான்
பிரதமர்
இம்ரான் கான்
கலந்து கொண்டார். இதனிடையே, சீனப் பிரதமர் லி கெக்கியாங்கை இம்ரான் கான் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, சீன பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிகிறது.
அத்துடன், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்தும், இம்ரான் கான் சீனாவிடம் பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லி கெக்கியாங் உறுதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி… இந்தியா விரைந்த இலங்கை அமைச்சர்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் சீன அரசு திட்டங்களுக்கும், அங்குள்ள சீன நாட்டினருக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிபடுத்த பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.