பாரதிராஜா இயக்கிய ’
கண்களால் கைது செய்
’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பின்னர் ஒருசில தமிழ் நடித்து வந்த நடிகை
பிரியாமணி
, தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.
2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் பிரியாமணி. கார்த்தியின் முதல் திரைப்படமான இந்த படத்தில் முத்தழகாக மிரட்டலான நடிப்பினை தந்திருந்தார். அச்சுஅசல் கிராமத்து பெண்ணாக பருத்திவீரன் திரைப்படத்தில் வலம் வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை பிரியாமணி, அதன்பின்னர் ஒருசில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய அறிமுகப் படமான கண்களால் கைது செய் படம் குறித்தும், இயக்குனர் பாரதிராஜா குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் முட்டாள்தனம்: ‘புஷ்பா’ படத்தை விளாசிய பிரபலம்..!
அதில் என்னுடைய முதல் படமான ‘கண்களால் கைது செய்’ படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். ஆரம்பத்தில் நான் இந்தப்படத்தில் நடிக்க ரொம்பவே பயந்தேன். பாரதிராஜா முன்கோபக்காரர். அவருக்கு ரொம்ப சீக்கிரமாகவே கோபம் வந்திடும். ஏனென்றால் அவருடைய திரைப்படம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
பெரிய நடிகையாக உள்ள ராதிகா, ராதா உட்பட பல நடிகைகளும் அவரிடம் அடி வாங்கி இருக்கிறார்கள். அதோடு அவர் அடித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். அவரிடம் அடி வாங்க கூடாது என நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக என்னையும் அவர் அடித்துள்ளார் இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரியாமணி. அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.