சில நாடுகளில் குடியுரிமை கோரும்போது, நீங்கள் உங்கள் முந்தைய அல்லது உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை தியாகம் செய்யவேண்டியிருக்கும்.
சமீப காலம் வரை, ஜேர்மனியில் கூட அப்படி ஒரு விதி இருந்தது.
பிரான்சில் குடியுரிமை பெற, நீங்கள் உங்கள் முந்தைய அல்லது உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டியிருக்குமா?
நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு, அவரது முந்தைய நாட்டின் அல்லது சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்!
பிரான்சில் நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அல்லது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தால் நான்கு ஆண்டுகளில் குடியுரிமை கோரலாம்.
பிரான்ஸ் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறது.
ஆனால், உங்கள் சொந்த நாடு இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.
ஏனென்றால், சில நாடுகள் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. ஆகவே, நீங்கள் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு முன், உங்கள் நாடு இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.