பிரைம் டைம் பெருமாளு: `கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ' புலம்பும் நடிகை; அல்டிமேட் நபர் வாசித்த புகார்!

`கொஞ்சம் தாமதமாக என்ட்ரி தந்தார் பிரைம் டைம் பெருமாளு. சூடாக லெமன் டீயை நீட்டி விட்டு, ’24 மணி நேரமும் பி.பா. அல்டிமேட் பாத்திட்டிருக்கிறீர்போல, அதுக்காக ரெகுலர் வேலை மறக்கலாமா’ எனக் கேட்டோம்.`நல்லவேளை, அல்டிமேட்’ பத்தி ஞாபகப்படுத்துனீங்க. அதுல இருந்தே தொடங்கிடுறேன்’ என செய்திக்குள் இறங்கினார்.

அந்தாளுகூட எப்படிம்மா குடும்பம் நடத்துனீங்க‌?

பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்ஷனில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி, வெளியில் வந்ததும் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் மொபைல் எண் வாங்கி அவரிடம் நீன்ட நேரம் பேசினாராம். `உங்க விவகாரம் எப்ப ஆரம்பிச்சது, எந்த நிலையில இருக்குனு எனக்கு எதுவும் தெரியாதும்மா. ஆனா ஒரு விஷயம் உங்கிட்டச் சொல்லணும்மா. எப்படிம்மா அந்த ஆளுகூட குடித்தனம் நடத்தினீங்க. உண்மையில உங்களுக்கு கோவிலே கட்டலாம். இங்கிட்டு ஒரு பேச்சு, அங்கிட்டு ஒரு பேச்சு.. ஒரு வாரம்தான் பேசிப் பழகி இருக்கேன்.

ராதிகா ப்ரீத்தி

என்னாலயே தாங்க முடியலை. அவ்வளவு விஷம்’ என சகட்டு மேனிக்கு பாலாஜியைப் புகழந்து (?) தள்ளி விட்டாராம்.
இன்ட்ரஸ்டாக எல்லாவற்றையும் கேட்ட நித்யா, கடைசியில், ‘சரி சார் ஆம்பளங்கள்ல பாலாஜின்னா; அங்க இருக்கிற லேடிஸ்ல யாரை பாய்சன்னு சொல்லுவீங்க’ என்றும் கேட்டு விட்டார்.
அனிதா சம்பத் என பட்டெனப் பதில் சொன்னாராம் சுரேஷ் என்ற பெருமாளிடம், சீரியல் நடிகர்கள் சங்கத் தேர்தல் அப்டேட் எதுவும் உண்டா’ எனக் கேட்டோம்.
`நெக்ஸ்ட் என்னன்னு கேட்டா ரெஸ்ட்’ வடிவேலு சொல்ற ஒரு காமெடிக் காட்சி `போக்கிரி’ படத்துல வரும். அதுதான் இப்போதைய நிலைமை’ என்றபடி அந்த விவகாரத்துக்கு மாறினார்..

போங்கப்பா நீங்களும் உங்க தேர்தலும்!

“சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்சோதி நட்த்துவார்னு அறிவிக்கப்பட்டது. இப்போதைய நிர்வாகம்தான் பரஞ்சோதியை நியமிச்சிருந்தது. இந்தப் பரஞ்சோதிதான் இப்ப திடீர்னு `நான் இந்தப் பொறுப்புல இருந்து விலகிக்கறேன்’னு அறிவிச்சிருக்கார்.
இந்தத் திடீர் விலகலுக்கான காரணம் குறித்து டிவி ஏரியாவுல விசாரிச்சேன். சிலர் அவருக்குக் கோவிட்னு சொல்றாங்க. அது எந்தளவுக்கு உண்மையினு தெரியல. ஏன்னா, ரவி வர்மா அணியை எதிர்த்துப் போட்டி போடுற அணிக்குதான் ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கறதாச் சொல்றாங்க. அந்த அணியின் தூண்டுதல்ல சங்கத்தின் பழைய உறுப்பினர் ஒருத்தர், `தேர்தல் அதிகாரி நியாயமா தேர்தலை நடத்துவார்னு நம்பிக்கையில்லை’னு ஒரு வழக்கையும் தொடுத்தாராம். அந்த வழக்கு, அப்புறம் ஆளுங்கட்சிப் புள்ளிகளின் எதிர்ப்பு, இதையெல்லாம் பார்த்துட்டுத்தான் ரிட்டயர்டு ஜட்ஜ் `போங்கப்பா நீங்களும் உங்க எலக்ஷனும்’னும் சொல்லிட்டு ஜகா வாங்கிட்டார்னு பேசிக்கறாங்க”என்றார்.

தீபக்

`சீரியல்கள்ல என்னதான் நடக்குது. நிறைய ஹீரோ ஹீரோயின் மாறிட்டே இருக்காங்களே’ என சமீபத்திய நம் சந்தேகத்தை பெருமாளிடம் கேட்டோம்.

‘சன் டிவியில நல்லா போயிட்டிருந்த ‘பூவே உனக்காக’ தொடர்ல இருந்து ராதிகா ப்ரீத்தி வெளியேறிட்டார். தன்னுடைய விலகலை அறிவிச்சப்ப அந்தப் பதிவுல ‘பூவரசி’ன்னு தன்னுடைய கேரக்டர் பெயரை அவர் குறிப்பிட்டிருந்ததைக் கவனிச்சீங்களா? ‘கொஞ்சம் அவசரப் பட்டுட்டோமோ’னு இப்ப அவர் நினைக்கறதா சொல்றாங்க. சமீபமா அந்த சீரியல் ஹிட் ஆனதென்னவோ நிஜம்தான். ஆனா அதுக்கு காரணம் தான் மட்டுமேனு நினைச்சு அவர் சம்பளத்தைக் கூட்டிக் கேட்டதாச் சொல்றாங்க. அதுக்கு யூனிட் மறுத்தா, வெளியேறப் போறதாச் சொல்லியிருக்கார். ஆனா யூனிட் ‘டக்’னு ‘போகணும்னா போங்க’னு சொல்லும்னு அவர் எதிர்பார்க்கலையாம்.
இதேபோல ஜீ தமிழ்ல ‘என்றென்றும் புன்னகை’ சீரியல்ல ஹீரோவா நடிச்சிட்டிருந்த தீபக் சமீபத்துல கல்யாணம் செய்துகிட்டார். பிஸியோ என்னவோ, தன்னால சீரியல்ல தொடர்ந்து நடிக்க‌ முடியாதுன்னு சொன்னாராம். அதனால ‘ரஜினி’ சீரியல்ல நடிச்சிட்டிருந்த விஷ்ணுவை இப்ப ‘என்றென்றும் புன்னகை’ ஹீரோவா கமிட் செய்திருக்காங்க’ என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.