விஜய்யின் ‘பீஸ்ட்’ புரோமோஷன்ஸ் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே முதன்முறையாக இணையும் படம் ‘பீஸ்ட்’. இதன் ரிலீஸ் வருகிற ஏப்ரல் 14ம் தேதி என்கிறார்கள். இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட் லோடிங் என அறிவித்திருக்கிறர்கள். இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த அப்டேட் குறித்தும் படத்தின் இதர தகவல் குறித்தும் படத்தின் தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தோம்
‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோ கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகவிருந்தது. லாக்டவுன், தியேட்டர்கள் ஐம்பது சதவிகித இருக்கை என கொரோனா கட்டுப்பாடுகளால் அன்று வெளியிடவிருந்த சிங்கிளை தள்ளி வைத்தனர். இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டதால் ‘பீஸ்ட்’டின் அதிரடி சிங்கிளை இன்று வெளியிட உள்ளனர். இது சிவகார்த்திகேயன் எழுதிய பாடலாகவும் இருக்கலாம். அது ‘டாக்டர்’ படத்தில் ‘ஸோ பேபி’க்காக நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் பங்கேற்கும் ஸ்கிரிப்ட் வீடியோ போல இருக்கலாம். இல்லாவிட்டால் சிங்கிள் பாடலுக்கான ஸ்கிரிப்ட் வீடியோவாகவும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு விஷயம், ‘அரேபியன்’ பாடலாக இருக்கலாம் என்கிறார்.
தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரை படத்தில் உள்ள ஐந்து பாடல்களையுமே புரொமோஷனுக்கான எடிட் செய்து வைத்துள்ளனர். இன்று வெளியாகும் சிங்கிளைத் தொடர்ந்து விஜய், பூஜா ஹெக்டேயின் லவ் டூயட் பாடலை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளனர் என்றும் தகவல். அதைப் போல ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர். அதன்பின் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.. இப்போது 14ம் தேதியே ரிலீஸ் செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தின் சென்ஸார் ஆனதும், ரிலீஸ் தேதியை அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளனராம்.