மடகாஸ்கர் தீவை புயல் தாக்கியது – 20 பேர் உயிரிழப்பு

அன்டனானரிவோ:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கில் கடும் புயல் தாக்கியது
கனமழை மற்றும் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன்
நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால்  தீவின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பிரதான சாலை பகுதி பாதிக்கப்பட்டது.
மேலும் 20 சாலைகள் மற்றும் 17 பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.கிழக்கு பகுதி நகரமான மனஞ்சரி முற்றிலும் அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. 
இந்த இயற்கை சீற்றத்திற்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். மேலும்  55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.