புதுடெல்லி:
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின், ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை 4 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா பாடகி லதா மங்கேஷ்கரின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது பேசிய அவர் நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என தெரிவித்தார்.
இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின், ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்…கொரோனா பரவல் குறைந்தது- கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு