மீன ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் திருப்பமான நாள்! இன்றைய நாள் உங்களுக்கு எப்படி



இன்றைய தினம் பெப்ரவரி 7ம் திகதிக்கான ராசிபலன்கள் குறித்து பாரக்கலாம்.

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.


மிதுனம்:
குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.


கடகம்:
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.‌ உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.


சிம்மம்:
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.


கன்னி:
சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


துலாம்:
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.


விருச்சிகம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும். அமோகமான நாள்.


தனுசு:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


மகரம்:
கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கும்பம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.


மீனம்:
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.