முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் விவரம்: இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொளி காட்சி பிரசாரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நேற்று கோவை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நிலையில், இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என பல முனை போட்டி நிலவி வருகிறது. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில்,  தி.மு.க. மற்றும்கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில்  ஸ்டாலின் காணொலி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். நேற்று  கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும்கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து, இன்று (7ந்தேதி)  சேலம் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மற்றும் அதன்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாளை (8ந்தேதி) கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் பிரசாரம் செய்கிறார்.

நாளை மறுதினம் (9ந்தேதி)தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்கிறார்.

 10-ந்தேதி ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

11-ந் தேதிகன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 

12-ந்தேதி திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்,

13-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்,

14-ந்தேதி மதுரை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்,

15-ந்தேதி தஞ்சை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்,

17-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.