லக்னோ:
உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்பதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நொய்டாவின் டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப் படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் பெற அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்கவில்லை.
சில முதலாளித்துவ நண்பர்களின் நன்மைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது.நாங்கள் இங்கு மாற்றத்தை கொண்டு வருவோம்.
டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கிறது. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்த அனைத்தை முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எனது சகோதர சகோதரிகளுக்கு நான் கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.