பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்
புகழ்
. தனது காமெடியான பேச்சு மற்றும் செயல்களால் பலரது உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி தென்னுார் சாலையில் புதியதாக கட்டப்பட்ட பிரியாணி உணவகம் திறப்பு விழாவிற்கு புகழ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்த அவர் அதன் பின்னர் தரை தளத்தில் இருந்த நகைக்கடைக்கு செல்ல திட்டமிட்டார்.
லிப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல விழா ஏற்பாட்டாளர்கள் அவரை லிப்டிற்குள் அனுப்பி வைத்தனர். புகழுடன் ஒரிருவர் மட்டுமே லிப்டில் சென்றனர். போட்டோகிராபர்கள், பாக்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள நகை கடைக்கு விரைந்து சென்றனர். தரைதளத்தில் சென்று காத்திருந்த போதும் லிப்ட் கீழே வரவில்லை. 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிப்ட் வராததால் கீழே காத்திருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பல்லக்கில் வீதி உலா ; பரவசத்தில் பக்தர்கள்
இந்நிலையில் ஒரு வழியாக லிப்ட் கீழே வந்திறங்கிய போது புகழ் வௌியில் வந்தார். ஏன் தாமதம் என்று கேட்ட போது 10 நிமிடத்திற்கும் மேலாக லிப்ட் திடீரென வேலை செய்யதால் முதல் தளத்திலேயே நின்று போனது. பிறகு சரியான பிறகு திரும்ப இயக்கப்பட்டு வந்ததாக புகழ் தொிவித்துள்ளார். கடை திறப்பு விழாவுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம் லிப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.