இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது பணபுழக்க அளவீட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தையும் அதிகப்படியான வர்த்தக சரிவை எதிர்கொண்டு உள்ளது.
இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்.. ஆர்பிஐ-யின் புதிய சேவை..!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை 7 – 9 வரையில் மட்டுமே நடத்த திட்டமிட்டு இருந்தது, ஆனால் தற்போது இக்கூட்டத்தை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
ரெப்போ விகிதம்
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காது என ஒரு தரப்பு கூறினாலும் மறு தரப்பு கட்டாயம் ரெப்போ விகிதத்தை 15 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டியை உயர்த்தப்படும் என கணித்துள்ளது.
டிசம்பர் கூட்டம்
ரிசர்வ் வங்கியின் கடந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவித்தது. இதன் மூலம் 9 நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டி விகித மாற்றமும் செய்யவில்லை.
பட்ஜெட் அறிக்கை
இந்த நாணய கொள்கை கூட்டம் மத்திய பட்ஜெட் அறிக்கைக்கு பின்பு வெளியாகும் காரணத்தால் ரிசர்வ் வங்கியின் முடிவு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
RBI may increase repo rate by 15-40 bps in MPC
RBI may increase repo rate by 15-40 bps in MPC வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் RBI..!