இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ வன்பொருள் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்ற மிகமுக்கியமான திட்டத்துடன் கூகுள் உடன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிளின் மேக்புக் போலவே ஜியோபுக் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் லேப்டாப்-ஐ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிர்வாகம்.
3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
ஜியோ போன்
இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், இப்பிரிவு டெலிகாம் வாடிக்கையாளர்களை 4ஜி சேவை பிரிவுகள் கொண்டு வந்து அதிக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே கூகுள் உடன் இணைந்து பிரத்தியேகமாக இந்திய மக்களுக்கான மென்பொருளை உருவாக்கி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜியோபுக்
தற்போது இதேபானியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் லேப்டாப் கிடைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான திட்டத்துடன் ரிலையன்ஸ் ஜியோ, ஜியோபுக் என்னும் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்யப் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட நிலையில் தற்போது ஜியோபுக்-க்கான வன்பொருள் ஒப்புதல் கிடைத்துள்ளது.
விண்டோஸ் 10, ARM பிராசசர்
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி ஜியோபுக் விண்டோஸ் 10 மென்பொருள் உடன் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜியோபுக்-ன் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ARM நிறுவனத்தின் பிராசசர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி
சீனாவின் எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி நிறுவனம் ARM பிராசர் கொண்ட லேப்டாப்-ஐ தயாரிப்பதில் முன்னோடியாக விளங்கும் நிலையில், ஜியோ இந்நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் மலிவு விலையில் ஜியோபுக்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மற்றும் மென்பொருள் சேவை பிரிவில் மட்டும் அல்லாமல், வன்பொருள் சேவை பிரிவிலும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது.
டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்டிவி
இத்திட்டத்தின் படி ஏற்கனவே ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஜியோபுக், அடுத்தாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்டிவி-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்டிவி சீன நிறுவனங்களை விடவும் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RIL Jio plans to launch JioBook – low cost laptop sooner
RIL Jio plans to launch JioBook – low cost laptop sooner விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..!