Andhra MLA Roja meets CM Stalin: அவசரம் தேவையை கருதி நேரில் வந்து சந்தித்தாக முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு, ஆந்திர மாநில எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ., ரோஜா இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
அப்போது, ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ரோஜா. மேலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தங்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜா, அவசரம் தேவையை கருதி நேரில் வந்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தோம். கொரோனா காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொரோனா பாதிப்பால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். இரு மாநில தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினோம். பிரச்சினைகளை கேட்டறிந்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். என்று கூறினார்