மும்பை பங்குச்சந்தை இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கினாலும் அடுத்தச் சில நிமிடத்தில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை அளிக்கத் துவங்கியுள்ளது. இன்றைய சரிவுக்குப் பல காரணங்கள் உள்ளது என்றால் மிகையில்லை.
இன்றைய வர்த்தக சந்தையில் ஆட்டோ மற்றும் நிதியியல் சேவைத் துறை பங்குகள் அதிகளவில் சரிந்தது மட்டும் அல்லாமல் பிற துறைகளும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்கச் சந்தை..
காளையா..கரடியா..குழப்பத்தில் முதலீட்டாளார்கள்.. சென்செக்ஸ்,நிஃப்டி நிலவரம் என்ன..!

அமெரிக்கச் சந்தை
அமெரிக்கச் சந்தையில் வேலைவாய்ப்புத் தரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தாலும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குச் சாதமாக இருந்தது. ஆனால் இதேவேளையில் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி அதிகரிப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் காரணத்தால் ஆசிய சந்தை மொத்தமும் சரிவை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை ஏற்கனவே அதிகப்படியான பணவீக்கம், பட்ஜெட் எதிரொலி, நாளை துவங்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஆகியவற்றின் காரணமாக மந்த நிலையில் இருந்த வேளையில் அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்புத் தரவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் – மெட்டா
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலரை தொட்ட நிலையில், பேஸ்புக்-இன் மெட்டா மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது. இதுவும் டெக் முதலீட்டுப் பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால் எஸ் அண்ட் பி பியூச்சர்ஸ் மற்றும் நாஸ்டாக் பியூச்சர்ஸ் ஆகியவை சரிவை தழுவியது.

டாடா ஸ்டீல்
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பவர் கிரிட், எஸ்பிஐ, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை கணிசமான உயர்வை பதிவு செய்த நிலையில், ஹெச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, கோட்டாக் மஹிந்திரா ஆகியவை அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது.
Sensex Falls Over 1000 Points; Reasons behind the fall
Sensex Falls Over 1000 Points; Reasons behind the fall 1100 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. சரிவுக்கு இதுதான் காரணம்..!