மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்பு தொடர் வர்த்தகச் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை, தொடர் வர்த்தகச் சரிவில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு வந்தனர்.
குறிப்பாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்திருந்த வங்கி மற்றும் நிதியியல் துறை பங்குகள், ஐடி சேவை, ஆட்டோமொபைல் எனப் பல முக்கியத் துறைகள் தொடர் சரிவில் உள்ளது.
ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..!
6 லட்சம் கோடி ரூபாய்
இதன் வாயிலாகக் கடந்த 3 நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை முதலீட்டை இழந்துள்ளனர். இந்தச் சரிவுக்குக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் முடிவால் அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை தான் முக்கியக் காரணம்.
இன்றைய வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 2 சதவீதம் வரையில் சரிந்தது.
சென்செக்ஸ்
இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவில் இருந்த காரணத்தால் 57,299.05 புள்ளிகள் வரையில் எட்டியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1023.63 புள்ளிகள் சரிந்து 57,621.19 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 302.70 புள்ளிகள் சரிந்து 17,213.60 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, நிதியியல் சேவை, எப்எம்சிஜி, தனியார் வங்கி ஆகிய நிஃப்டி குறியீடு 2 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கச் சந்தை
அமெரிக்கச் சந்தையில் வேலைவாய்ப்புத் தரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தாலும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குச் சாதமாக இருந்தது. ஆனால் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி அதிகரிப்பதில், அன்னிய முதலீட்டுச் சந்தையில் இருந்து முதலீடுகள் அதிகளவில் வெளியேறிய காரணத்தால் ஆசிய சந்தை மொத்தமும் சரிவை சந்தித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன்
கச்சா எண்ணெய் விலை ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை பாதித்துள்ளது. இதேவேளையில் OPEC நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாகச் சொன்னாலும் பல்வேறு காரணத்தால் குறித்த அளவிற்கு உற்பத்தி செய்யாமல் உள்ளது.
நைஜீரியா – லிபியா
இந்நிலையில் நைஜீரியாவில் ஆயில் சூப்பர் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் பல நூறு டன் கச்சா எண்ணெய் வீணாகியுள்ளது. இதேபோல் லிபியாவில் 6 துறைமுகத்தில் பருவநிலை காரணமாக ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 91.51 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 92.87 டாலராகவும் உள்ளது.
Stock Market investors lose over Rs 6 lakh cr in 3days
Stock Market investors lose over Rs 6 lakh cr in 3days 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!