உலகின் பல விதமான வைரங்கள் உள்ளன. ஆனால் இந்த வைரங்களிலேயே மிகச்சிறந்த வைரம் கோஹினூர் வைரம் தான். உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரமான கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது.
ஆனால் இந்த வைரம் தற்போது இந்தியாவில் இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் உள்ள தற்போது எலிசெபத் ராணியின் கிரிடத்தில் இந்த வைரம் இருக்கிறது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகள் செய்தும் வைரம் இந்தியாவிற்குள் வரவில்லை.
இந்நிலையில், எலிசபெத் ராணிக்கு பிறகு, இந்த விலைமதிப்பற்ற வைரம் பதித்த கிரீடம் ராணியால் ஒப்படைக்கப்படும் என்று UK செய்தி வெளியீட்டின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியது. 2,800 வைரங்களைக் கொண்ட கிரீடத்தில், உலகப் புகழ்பெற்ற கோஹினூர் மகுடமாக உள்ளது. ராணியின் மூத்த மகனும், இளவரசர் சார்லஸ் முடிசூட்டப்படும் போது, அவரது மனைவி டச்சஸ் ஆஃப் கார்ன்வால் கமிலாவிடம்கொடுக்கப்படும் என்கிறது அந்த அறிக்கை.
ALSO READ | Number 13: எண் ‘13’ என்றாலே அஞ்சும் உலகம்; காரணம் என்ன!
தற்போது இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிளாட்டினத்தால் ஆனது. அந்த கிரீடம் நூற்றுக்கணக்கான வைரங்களால் மின்னுகிறது. 1937 ஆம் ஆண்டில், இது முதலில் கிங் ஜார்ஜ் VI மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக உருவாக்கப்பட்டது. கிரிமியன் போரில் பிரிட்டிஷ் இராணுவம் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 1856 ஆம் ஆண்டில் அப்போதைய துருக்கியின் சுல்தானால் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு பெரிய வைரக் கல்லும் கிரீடத்தில் உள்ளது.
105 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம், கிரீடத்தின் முன் பிளாட்டினத்தினால் செய்யப்பட்ட சிலுவையுடன் இணைக்கப்பட்டது.
இளவரசர் சார்லஸ் மன்னராக ஆகும் போது அவரது மனைவி இளவரசி கமிலாவுக்கு ராணி துணைவி என்ற பட்டமும் வழங்கப்படும் என்று இங்கிலாந்து ராணி சமீபத்தில் அறிவித்தார். இளவரசர் சார்லஸின் முடிசூட்டு விழாவின் போது கமிலா ராணியாக முடிசூட்டிக் கொள்ளும் போது கிரீடம் அவரிடம் ஒப்படைக்கப்படும்.
ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!
உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்றான கோஹினூர் ‘ஒளியின் மலை’ என்று பிரபலமாக அறியப்பட்டது. இது இந்தியாவில் வெட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. அவர் கோஹினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு இங்கிலாந்து சென்றது.
ALSO READ | தண்ணீரில் ஏன் எண்ணெய் மிதக்கிறது; இரண்டும் சேராததன் காரணம் என்ன…!!!