போக்கோ நிறுவனம், தனது எக்ஸ் தொகுப்பில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது.
போக்கோ எக்ஸ்4
(Poco X4 5G) என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை, மொபைல் பதிவு தளங்களில் போக்கோ நிறுவனம் பதிவுசெய்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு, ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி (Redmi Note 11 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு ஒத்ததாக இருக்கிறது.
அமோலெட் திரை, ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட், பின்புறம் மூன்று கேமரா என போக்கோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் 2201116PIஎன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்கோவின் எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
iQoo 9 Series 5G: சும்மா கெத்தா வருது பாரு… Gimbal கேமரா, SD 8 Gen 1 சிப்செட் உடன் வெளியாகும் ஐக்யூ 9 சீரிஸ்!
போக்கோ எக்ஸ்4 அம்சங்கள் (Poco X4 Specifications)
இந்த போக்கோ எக்ஸ்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67″ அங்குல முழு அளவு எச்டி+ AMOLED திரையைக் கொண்டு வெளிவருகிறது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. மேலும், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாதுகாப்பு கண்ணாடி போன்ற அம்சங்களைக் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான போக்கோ ஸ்கின் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட்போனை இயக்க, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 5ஜி ஆதரவு கொண்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tecno Pova 5G: டெக்னோவின் முதல் 5ஜி போன்… அம்சங்கள் டாப் டக்கர்!
போக்கோ எக்ஸ்4 கேமரா (Poco X4 Camera)
போக்கோ எக்ஸ்4 5ஜி ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மைக் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும், செல்பி எடுப்பதற்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தேவையான 16 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அமோலெட் திரையில் வரும் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ்4 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி / 8ஜிபி ரேம் வகைகளைக் கொண்ட இரு வேரியண்டுகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இதில் இருக்கும் என்று தெரிகிறது. கூடுதலாக மெமரியை நீட்டிக்க, மெமரி ஸ்லாட் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் Infinix Zero 5G விரைவில் அறிமுகம்!
இந்த ஸ்மார்ட்போனை திறனூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 33W அல்லது 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைரேகை சென்சார், வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் போன்ற பல்வேறு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. போக்கோ நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் தனது போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது நினைவுக்கூரத்தக்கது.
POCO M3 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், 6.53″ டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி, 4ஜிபி / 6ஜிபி ரேம், 64ஜிபி / 128ஜிபி மெமரி, 4ஜி ஆதரவு ஆகிய அம்சங்களைக் கொண்டதாகும்.
5ஜி மொபைல் ரூ.15,000க்கும் கீழ்… இதுல உங்களுக்கு புடிச்சது எது?