Tamil News Today LIVE: இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்!

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 95-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: ஆளுநர் டெல்லி பயணம் திடீர் ரத்து!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பாக’ நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஆளுநர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (பிப்.7) கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu News LIVE Updates

100 சதவீத ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை!

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து, துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல்.. விசாரணை தொடங்கியது!

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி மல்ஹோத்ரா தலைமையிலான ஐவர் குழு விசாரணையை தொடங்கி உள்ளது.

Live Updates

9:04 (IST) 7 Feb 2022
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தல்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில்’ போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வத்தை மற்றொரு வேட்பாளர் லட்சுமணன் கடத்தி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


8:51 (IST) 7 Feb 2022
மக்களவையில் இன்று!

கடந்த மாதம் 31ம் தேதி மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி மக்களவையில் இன்று பதிலளிக்கிறார்.


8:50 (IST) 7 Feb 2022
4.27 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்!

தமிழ்நாட்டில் 4.27 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், சுமார் ஒரு கோடி பேர், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை எனவும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


8:39 (IST) 7 Feb 2022
சபரிமலை கோயில் நடை வரும் 12-ஆம் தேதி திறப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, வரும் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.


8:39 (IST) 7 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு.. பொது விடுமுறை அறிவிப்பு!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மகாராஷ்டிராவில் இன்று பொதுவிடுமுறையும், மேற்கு வங்கத்தில் அரை நாள் விடுமுறையும் அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


8:38 (IST) 7 Feb 2022
திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


8:37 (IST) 7 Feb 2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு.. மணற்சிற்பம் செதுக்கி அஞ்சலி!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் செதுக்கிய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.