கவர்ச்சி ரூட்டில் இறங்கிய மீராஜாஸ்மின்
தமிழில் தான் அறிமுகமான ரன் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஓடிப்பிடித்து கபடி ஆடியவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் சோசியல் மீடியாவில் கால்பதித்த மீராஜாஸ்மின் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான படங்களை வெளியிட்டு வந்த மீரா ஜாஸ்மின் தற்போது அதிரடி கிளாமரில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. இதையடுத்து தான் கவர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டதை மீராஜாஸ்மின் சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.