ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக முன்னேறியுள்ளார், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி.
இது குறித்து ப்ளூம் பெர்க் ஆய்வில், துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுபிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட வணிகங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வரும் கெளதம் அதானியின் சொத்து மடங்கு பலமடங்கு அதிகரித்துள்ளது.
5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!
இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்களான அம்பானியும், அதானியும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை செய்து வருகின்றனர்.
அதானி முதலிடம்
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் (Bloomberg Billionaires Index) வெளியான அறிக்கையின் படி, 59 வயதான தொழிலதிபரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. கிட்டதட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு தொழிலதிபரான முகேஷ் அம்பானியை விஞ்சியுள்ளார்.
2வது இடத்திற்கு தள்ளப்பட்ட அம்பானி
தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராகும்.
சமீப காலமாக அம்பானியை விட, அதானியின் மதிப்பானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.
அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கை
குறிப்பாக அதானி குழுமம் சரியான நேரத்தில் திட்டமிட்டு ஒவ்வொரு துறையிலும் காலடி எடுத்து வைத்து வருகின்றது.
மேலும் இந்திய அரசும் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு சாதமாகவும் அமைந்துள்ளது.
எல்லாம் சாதகம் தான்
இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது. அதானி குழுமத்தினை சேர்ந்த சில பங்குகள் அதன் வெளியீட்டு விலையில் இருந்து 600% மேலாக ஏற்றம் கண்டுள்ளன.
இதற்கிடையில் இந்திய அரசு ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கினை அடைய பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதுவும் அதானி குழுமத்திற்கும் சாதகமான ஒரு செய்தியாகவும் இருந்து வருகின்றது.
Billionaire gaudam adani overtakes mukesh ambani as the India’s richest person
Billionaire gaudam adani overtakes mukesh ambani as the India’s richest person/ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!