லண்டன்,
இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் பால் காலிங்வுட், அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரை தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.