இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக 1 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று (08) காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,524 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் தினசரி பாதிப்பு விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 5.02 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 9.18 சதவீதத்தில் இருந்து 8.30 ஆகவும் குறைந்துள்ளது.
இருப்பினும் இந்தியா முழுவதும் நேற்று 1,188 பேர் இறந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,04,062 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,80,456 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 8 இலட்சத்து 40 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,94,891 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் மக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியே 21 இலட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 55,78,297 டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராயச்சி நிலையம் தெரிவித்துள்ளது.