உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க மற்றும் பிற நடவடிக்கை எடுக்க பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஐரோப்பாவை பாதுகாக்க பிரித்தானியா விமானப்படையின் போர் விமானங்களை மற்றும் கடற்படையின் போர் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருதாகக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் Liz இருவரும் விரைவில் ரஷ்யாவுக்கு பயணிப்பார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பிரித்தானியா பொருளாதாரத் தடைகள் விதிக்க மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்கிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க, அவரது அரசாங்கம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கும் என ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் பட்ச்த்தில் நார்ட் ஸ்ட்ரீம் 2 மறுபரிசீலனை செய்யப்படும் என ஜேர்மனி அறிக்கை வெளியிட்டுள்ளதை ஜான்சன் வரவேற்றுள்ளார்.