ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஒட்டாவா:
கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரக்கு லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் அந்நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது. 
சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்  பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் அவசர சட்டம் பிரகனப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில்  கனடா அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் டவுன்டவுன் ஒட்டாவா போன்ற பகுதிகளுக்கு செல்வதை கனடா வாழ் இந்தியர்கள் தவிர்க்குமாறு அந் நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்குச் சட்டம் உட்பட உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
துயரத்தில் சிக்கிய இந்தியக் குடிமக்களுக்கு உதவும் வகையில் வழி காட்டுதலை வழங்குவதற்காக, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.அங்குள்ள சூழல்களை உள்ளூர் ஊடகங்கள் மூலம் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சரக்கு லாரி ஓட்டுனர்களின் போராட்டம் கைவிடப் பட வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 
தமது ட்விட்டர் பக்கத்தில் குவிப்பிட்டுள்ள அவர், அரசுடன்ககருத்து வேறுபாடு கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் பொருளாதாரத்தை அல்லது நமது ஜனநாயகத்தை முடக்கும் உரிமை  இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.