கொரோனா மூன்றாவது அலை உலக நாடுகளில் பரவலாக குறைந்து வருகிறது. இருப்பினும் ரஷியாவில் அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அங்கு கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் புதிதாக 1.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1.80 லட்சமா இருந்தது. ரஷியாவில் நேற்று மட்டும் கொரோனா 609 பேர் உயிரிழந்தனர்.
நாள்தோறும் புதிதாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது ரஷிய நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
2020 இல் கொரோனா முதல் அலையின்போது உலக அளவில் அதிக உயிர் பலியை சந்தித்த நாடுகளில் ரஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.