கனடா தலைநகர் ஒட்டவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர்.
இதையடுத்து தலைநகருக்கு ஒட்டவாவில் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கைகளுக்கு விலங்கு பூட்டுவது போல் அடுத்த 10 நாட்களுக்கு ஹாரன்களை ஒலிக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.