இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இது அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டாவுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
பல்வேறு சர்வதேச காரணிகளும் பங்கு சந்தைகளுக்கு சாதகமாக திரும்பி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் 7 வருட உச்சத்தில் இருந்து தற்போது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இதுவும் சாதகமான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனை.. மன்னிப்பு கேட்ட கேஎப்சி..!
காலாண்டு முடிவுகள்
இதற்கிடையில் இன்று பல்வேறு காரணிகளும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. குறிப்பாக பார்தி ஏர்டெல், ஐ ஆர் சி டி சி, பாட்டா இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் & பவர், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ உள்ளிட்ட பல நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.
முதலீடுகள் வெளியேற்றம்
என்.எஸ்.இ தரவுகளின் படி பிப்ரவரி 7 நிலவரப்படி, 1157.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1376.49 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுவும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க நிறுவனங்காள் வலுவான அறிக்கையினை வெளியிட்ட நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதன் காரணமாக இந்திய சந்தையும் இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 57.60 புள்ளிகள் அதிகரித்து, 57678.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.70 புள்ளிகள் அதிகரித்து, 17,260.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 254.39 புள்ளிகள் அதிகரித்து, 57,875.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 76.70 புள்ளிகள் குறைந்து, 17,290 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1373 பங்குகள் ஏற்றத்திலும்,498 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ்,பிஎஸ்இ ஆயில் & டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் இருந்தாலும், பெரியளவிலான ஏற்றம் என்பது இல்லை.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சிப்லா, டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப், ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்ம் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டிசிஎஸ், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
10.16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 86.87 புள்ளிகள் குறைந்து, 57,534.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.30 புள்ளிகள் குறைந்து, 17,181 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.
opening bell: India’s indices trade flat with sensex above 57700
opening bell: India’s indices trade flat with sensex above 57700/காளையா..கரடியா.. இரண்டாவது நாளும் நீடிக்கும் குழப்பம்.. சென்செக்ஸ் 57,700 அருகில் வர்த்தகம்!