புத்காம்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஏ.ஜி.எச். என்ற இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்ஹீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுபற்றி கடந்த ஆண்டு ஜூனில் உத்தர பிரதேசத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதவிர, லக்னோ நகரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்றும் வழக்கு பதிவாகி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின்
புத்காம் மாவட்டத்தில் அல்-கொய்தா இயக்க பயங்கரவாதி அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இன்று கைது செய்துள்ளனர்.
லக்னோவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துவதற்கு அல்-கொய்தா இயக்கத்தின் திட்டமிடலுக்கு பின்புலத்தில் அகமது இருந்தது தெரிய வந்துள்ளது என என்.ஐ.ஏ. அமைப்பு தெரிவித்து உள்ளது.
தெரிவித்து கொள்கிறேன், பதிவிட்டு உள்ளார்
அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி,
அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கி கொண்டனர்.
இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ராணுவ வீரர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.
அதில், அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். நமது நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையை நாம் ஒருபோதும் மறந்து விடமுடியாது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.