குடிபோதையில் பிரதமர் பேசியதை கூட மறந்துபோன எம்.பி.! போட்டுக்கொடுத்து சர்ச்சையை கிளப்பிய மனைவி..


பிரித்தானிய எம்.பி ஒருவரின் மனைவி, தனது கணவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் போனில் பேசும்போது தன்னையே மறந்துபோகும் அளவிற்கு குடிபோதையில் இருந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ஜானி மெர்சர் (Johnny Mercer) இங்கிலாந்தின் பிளைமவுத் மூர் வியூவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) அன்று, மிகவும் குடிபோதையில் இருந்ததாக அவரது மனைவி ட்வீட் செய்துள்ளார். இது சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி. ஜானி மெர்சர் தனது வீட்டிலுள்ள சோபாவில் மல்லாக்க கிடக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவரது மனைவி, நேற்றிரவு மிகவும் வேடிக்கையான கதை ஒன்று நடந்தது என்று ஆரம்பித்தார்.

தனது கணவர் FA கோப்பை கால்பந்து மற்றும் இங்கிலாந்து ரக்பியைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்ததால் சில மதுபானங்களை அருந்தியதாகவும், அப்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜானேசனுடன் போனில் பேசியதாகவும், ஆனால், தனது கணவருக்கு பிரதமர் போனில் சொன்னதை நினைவில் கூட வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு போதையில் மயங்கி கிடந்ததாகவும், அதில் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் நடந்த மதுபான விருந்துகள் காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை அன்று எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஜானி மெர்சரின் மனைவி Felicity Cornelius-Mercer-ன் இந்த ட்வீட் பிரித்தானியாவில் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.

சமூக ஊடகங்களில், ஜானி மெர்சரை மட்டுமின்றி பிரதமர் போரிஸ் ஜான்சனையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஒரு சிலர், என்ன இருந்தாலும் அவர் ஒரு எம்.பி., அவரது மனைவியே இப்படி செய்திருக்கக்கூடாது என்று கூறினர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.