சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற Mini Cooper கார் ஒன்றில் லிப்ட் கேட்ட இரண்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம், இரன்டு பெண்கள் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே Mini Cooper கார் ஒன்று வந்துள்ளது.
இருவரும் அந்த காரை நோக்கி லிப்ட் கேட்டுள்ளனர். அந்த காரும் நிறுத்தப்பட்டது, அவர்களும் உள்ளே ஏறினார். உள்ளே சென்று இருவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஏனெனில், அந்த காரை ஒட்டி வந்தது சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு துறைகளின் மந்திரி சிமோனெட்டா சொம்மாருகா (Simonetta Sommaruga).
அவர் நினைத்திருந்தால், அவர்களுக்கு உதவி செய்யாமல் தனது பாதுகாப்பு தான் முக்கியம் என காரை நிறுத்தாமல் சென்றிருக்கலாம். ஆனால், அவர் மிகவும் பெருந்தன்மையாக இருவரையும் அழைத்துச்சென்று இறக்கிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் Bern பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்துள்ளது. இது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால், மந்திரியின் உதவிக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக இருவரும் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்த கடித்ததில், “எவ்வளவு அமைதியான நாடு எங்களிடம் உள்ளது, பெடரல் கவுன்சில் உறுப்பினர் சாதாரண ஹிட்ச்ஹைக்கர்களை காரில் அழைத்துச் செல்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை புகைப்படமெடுத்து, சிமோனெட்டா சொம்மாருகா தனது Instagram பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் சிமோனெட்டா ஒரு விடயத்தை எழுதியிருந்தார். அவர் அந்த பெண்களைப் பார்த்தபோது தனது Mini-ல் சாலையில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கிட்டத்தட்ட 90 வயதுடையவர் என்றும், இருவரும் பனிக்கட்டி சாலையில் நடந்து செல்வதைக் கண்டு உதவி செய்ததாகவும் கூறினார்.
இந்த பதிவைப் பார்த்த பொதுமக்கள் மந்திரி சிமோனெட்டாவை பாராட்டி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை (Federal Council) உறுப்பினர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொது இடங்களில் பார்ப்பது ஒன்றும் அசாதாரணமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது .