கடந்தாண்டு சினிமாத்துறையில் பல ஜோடிகள் விவாகரத்தை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கினர். கடந்தாண்டு
சமந்தா
மற்றும் நாகசைத்தன்யா தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இசையமைப்பாளர்
இமான்
தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்தார்.
மேலும் அதிர்ச்சிதரும் விதமாக நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
கடந்த மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும்
ஷில்பா ஷெட்டி
தனது கணவர் ராஜ் குந்த்ராவை பிரியப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு
ராஜ் குந்த்ரா
எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் ஆபாசப்படம் எடுத்ததாக கூறி ராஜ் குந்த்ராவை போலீசார் கைதுசெய்தனர். அதன் பின் ஜாமினில் வெளிவந்த ராஜ் குந்தராவிற்கும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் சமூகத்தளங்களில் பரவியது.
சிம்பு வழியில் அஸ்வின்?இனி வேற லெவல் தான் போலயே..!
ஆனால் இதை ஷில்பா ஷெட்டி மறுத்து வந்தார். இருப்பினும் தற்போது அவரது நடவடிக்கைகளை பார்த்து இவர் கண்டிப்பாக விவாகரத்து செய்துகொள்ள போகிறார் என்ற செய்திகள் மீண்டும் பரவ துவங்கியுள்ளது. என்னவென்றால் ராஜ் குந்த்ரா தற்போது தனது சொத்துக்களை சரிபாதியாக பிரித்து ஷில்பா ஷெட்டிக்கு வழங்கியுள்ளாராம்.
இது தவிர ராஜ் குந்த்ரா தனக்கு சொந்தமான பங்களாவை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி எழுதி இருக்கிறாராம். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ஷில்பா ஷெட்டிக்கும் ராஜு குந்த்ராவிற்கும் விரைவில் விவாகரத்து நடக்க இருப்பதாக சமூகத்தளங்களில் தகவல்கள் வருகின்றன.ஆனால் இதைப்பற்றி அதிகாரபூர்வமாக ஷில்பா ஷெட்டி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sila Nerangalil Sila Manithargal – மன இறுக்கத்திற்கு பேராறுதல்