தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 22ம் தேதியும் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.