தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள். அதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார். மாநகராட்சி – 11196, நகராட்சி – 17922, பேரூராட்சி – 28660 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது களத்தில்-57,778 வேட்பாளர்கள் உள்ளனர். இதில், 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
14,324 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், 2,062 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் வேட்புமனு எதுவும் தாக்கலாகவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.