புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
நான் மூன்று முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினேன். முதலாவதாக, பிரதமர் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார்.
ஒன்று மிகவும் பணக்கார இந்தியா, மற்றொன்று நம்பிக்கையற்ற, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் பெரும்பான்மையான மக்களுக்கான இந்தியா.
இரண்டாவதாக, இந்தியாவின் அரசு நிறுவனங்கள் பிரதமர் அழிக்கிறார்.
மூன்றாவதாக, அவரது வெளியுறவுக் கொள்கை, சீனாவையும்
பாகிஸ்தானையும் ஒன்றிணைக்க அனுமதிக்கிறது.இதனால் இந்தியாவை அவர் ஆபத்தில் ஆழ்த்துகிறார்.
மனிதர் [பிரதமர்] தனது வேலையை சரியாக புரிந்து கொள்ளவில்லை. சீனர்களும் பாகிஸ்தானியர்களும் இப்போது ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறேன். தயவு செய்து எழுந்திருங்கள். நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், சீனர்கள் லடாக்கிற்குள் நுழைந்ததைப் போன்ற உண்மைகளைப் புறக்கணிக்கிறீர்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்கவில்லை. இப்போது, சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்வதைப் பற்றி நான் மீண்டும் எச்சரிக்கிறேன். அவர்களின் உறவு நம் தேசத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நீங்கள் [பிரதமர் மோடி] காங்கிரஸ் பெயரையோ அல்லது நேருவின் பெயரையோ துஷ்பிரயோம் செய்ய விரும்பினாலும் எனது விருந்தாளியாக இருங்கள். ஆனால் குறைந்தபட்சம் உங்கள் வேலையைச் செய்யுங்கள்.
நாங்கள் உண்மையைப் பேசுவதால் பிரதமர் பயப்படுகிறார். எனது தாத்தா (ஜவஹர்லால் நேரு) தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக கொடுத்தார். எனது தாத்தாவிற்கு பிரதமரின் சான்றிதழ் தேவையில்லை. இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…காங்கிரசால் வம்சத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது: பிரதமர் மோடி தாக்கு