புதுடெல்லி :
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதன் மூலம் இதுவரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியை கடந்து விட்டது. இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்து இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.