
“சில மாணவர்களைக் கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?”

“ஒரு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி , அதை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?”
“நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.”

“நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது இல்லை. நீட் தேர்வு தேவை என்பது தனியார் பயிற்சி மையங்களுக்குச் சாதகமானது”

“நீட் தேர்வு என்பது மாணவர்களைக் கொல்லக்கூடியது. அது ஒரு தேர்வு இல்லை பலிபீடம்”

“ஏழை எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு… நீட்தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.”

“சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் உரிமைக்காக எந்த சட்டத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.”

“நீட் தேர்வு என்பது ஏழை ,எளிய மாணவர்களின் மருத்துவ கனவுக்குத் தடுப்புச்சுவர் போடுகிறது.”

“சமத்துவம் என்பது தான் இந்திய அரசியலமைப்பின் அடிநாதம். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட்தேர்வு என்ற தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா?”
“கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பது மாபெரும் அறிவு தீண்டாமை”