சென்னை: மகாபாரத தொடரில் பீமனாக நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி,74 நேற்று மாரடைப்பால் காலமானார்.
1988 களில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் ஒளிபரப்பாயின. அக் காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதில் மகாபாரத தொடரில் ‘பீமன்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி 74, அந்த சீரியலுக்கு பின் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ”பீம் பாய்” கதாபாத்திரத்திலும் இவர் நடித்து புகழ்பெற்றார்.
டில்லியில் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். எல்லை பாதுகாப்பு படை வீரராக தனது இளமை கால வாழ்க்கையை துவக்கி, தடகள விளையாட்டில் ‘வட்டு’ எறிதலில் சிறந்த வீரராக திகழ்ந்தார்.
ஆம் ஆத்மியில் இணைந்தார். பின்னர் பா.ஜ.வில் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் பிரவீன் குமார் சோப்தி மறைவை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement