போதையில் தகராறு செய்த கணவன்; கொன்று புதைத்த மனைவி – 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் அடுத்த குஜராம்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த 2011-ம் ஆண்டு குணசேகரனைக் காணாததால் அவர் தங்கை லட்சுமி, அவரின் அண்ணியான ஜெயந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயந்தி, அவர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகக் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்து ஆண்டுகளாகியும் இதுவரையிலும் தன் அண்ணன் வரவில்லையே என்று லட்சுமி கேட்க மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார்.

அரியலூர்

இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் நிலையத்தில், தன் அண்ணன் குணசேகரனைக் காணவில்லை எனப் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் பெயரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெயந்தி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். மனைவி ஜெயந்தி மட்டும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவலைச் சொல்லியிருக்கிறார். சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்களது ஸ்டைலில் விசாரணையை நடத்த அதன் பிறகு நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.

அரியலூர்

என்ன நடந்து என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸாருடம் பேசினோம். “குணசேகரன் தினமும் குடித்து விட்டு வீட்டில் பிரச்னை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், 2011-ம் ஆண்டு குடித்துவிட்டு வீட்டில் வந்து பிரச்னை செய்தபோது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயந்தி குணசேகரனைக் கீழே தள்ளி இருக்கிறார்.

அதில், அம்மிக்கல்லில் தலை மோதியதில் பலத்த காயம் அடைந்தவர், அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என பயந்துகொண்டு, கணவரின் உடலை ஜெயந்தி மற்றும் அவர் உறவினர்கள் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே உள்ள இடத்தில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர்.

உயிரிழப்பு

பின்னர் நான்கு வருடங்களுக்கு முன்பு புதைத்த இடத்தில் கிடந்த குணசேகரன் எலும்பை மூன்று பேரும் சேர்ந்து, அருகில் உள்ள ஏரியில் வீசியதாக விசாரணையில் சொன்னார்கள். அதன் பெயரில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Also Read: திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு: திருச்சி சமயபுரத்தில் இருவர் அதிரடி கைது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.