'போராட்டத்தை நிறுத்த வேண்டும்': டிரக் ஓட்டுநர்களை சாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை சாடினார். 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவிற்கு எதிரான போராட்டம் “நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். போராட்டத்தினால் ஏற்பட்ட இடையூறுகளை மேற்கோள் காட்டிய, பிரதமர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூர்வாசிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்!

கனடாவின் நாடாளுமன்றத்தில் திங்களன்று ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தனிநபர்கள் முயற்சிப்பதாக ட்ரூடோ சாடினார். 

முன்னதாக, போராட்டக்காரர்கள் இடைவிடாமல்  ஹாரன்களை ஒலிக்க செய்து மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும், பல வகைகளில் பொது மக்களை துன்புறுத்ததுவதாகவும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | அமெரிக்க-கனேடிய எல்லையில் இறந்த இந்திய குடும்பம்: பனியில் உறைந்து உயிர் போன பரிதாபம்

போராட்டக்காரர்களுக்கு கிடைக்கும் பொருள் உதவி, நிதி உதவுகளைத் தடுக்கும் வகையில், எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எரிபொருள், உணவு கொடுத்து உதவுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும்  படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.