இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி கையிருப்பு சிக்கல் காரணமாக கடந்த மாதம் மத்திய வங்கி ஒரு தொகுதி தங்க கையிருப்பினை விற்பனை செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய வங்கியிடம் 175 மில்லியன் டொலர் தங்க கையிருப்பு காணப்பட்டதாகவும், அது கடந்த மாதம் 92 மில்லியன் டொலராக குறைவடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியிடம் 3.1 தொன் எடையுடைய தங்கம் கையிருப்பில் இருந்த போதிலும், ஜனவரி மாதமும் தங்கம் விற்பனை செய்த காரணத்தினால் தற்போதைய கையிருப்பு 1.6 தொன்னாக குறைவடைந்துள்ளது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.