கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சீனா
மட்டும் இன்னும் ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் தீவிரமாக உள்ளது. தற்போது அங்குக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் தொடங்கி உள்ள நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள
பைஸ்
நகரில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டும் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நகரத்தில் சுமார் 35 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
பிப். 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் திடீர் விளக்கம்!
வியட்நாம் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைஸ் நகரில், கடந்த வாரம் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர முற்றிலுமாக தடை விதிக்கப்படுவதாகவும் நகரத் துணை மேயர் கு ஜுன்யன் அறிவித்து உள்ளார்.