தற்போது, சந்தையில் கால்பதிக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 4500mAh அல்லது 5000mAh பேட்டரி உடன் தான் வருகிறது. அதிவேக பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளதால், நிறுவனங்கள் பேட்டரியின் சேமிப்புத் திறனை குறைத்து தயாரிக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருந்தாலும், சிலருக்கு தினமும் இரண்டு முறை சார்ஜ் செய்வது எளிதான காரியமாக இருப்பதில்லை.
எனவே, அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், சந்தையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். Motorola முதல் Realme என பெரும்பாலான சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் படைப்புகள் 6000mAh பேட்டரியுடன் வருகின்றன. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கும். 6000 mAh பேட்டரி அல்லது அதற்கு மேல் திறன் கொண்டதாக வரும் MOTOROLA G40 Fusion, Realme Narzo 30A, SAMSUNG Galaxy F41, POCO M3, SAMSUNG Galaxy F62, Redmi 9 Power ஆகிய ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்கலாம்.
oppo reno 7 pro: உலகின் முதல் RGBW செல்பி கேமரா… அப்படி என்ன ஸ்பெஷல் கேமரா இது?
மோட்டோரோலா ஜி40 பியூஷன் (MOTOROLA G40 Fusion)
மோட்டோரோலாவின் ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடக்க மெமரி உடன் வருகிறது. இந்த போன் 6.78″ அங்குல அளவிலான எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இதில், 6000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது. Flipkart ஷாப்பிங் தளத்தில் இருந்து இந்த போனை ரூ.14,499க்கு வாங்கலாம்.
ரியல்மி நார்சோ 30ஏ (realme Narzo 30A)
நீங்கள் Realme Narzo 30A ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் வெறும் 8,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க மெமரி உடன் வருகிறது. இது 6.51″ அங்குல அளவிலான எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய போன் வாங்க போறீங்களா… இத கொஞ்சம் பாத்துட்டு போங்க!
சாம்சங் கேலக்ஸி எப்41 (SAMSUNG Galaxy F41)
SAMSUNG Galaxy F41 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்க மெமரி உடன் வருகிறது. இந்த போன் 6.42” அங்குல பிரமாண்டமான திரையைக் கொண்டுள்ளது. ஆற்றலுக்காக இதில் 6000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை Flipkart ஷாப்பிங் தளத்தில் வெறும் 14,499 ரூபாய்க்கு நீங்கள் வாங்கமுடியும்.
போக்கோ எம்3 (POCO M3)
POCO M3 ஆனது 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ஆதரவுடன் வருகிறது. இந்த போன் 6.53″ அங்குல அளவிலான எல்சிடி டிஎப்டி திரையைக் கொண்டுள்ளது. இதில் 6000mAh சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. POCO M3 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.11,499க்கு வாங்கலாம்.
Tata Play Binge: டாடா பிங்கே+ ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸில் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்!
சாம்சங் கேலக்ஸி எப்62 (SAMSUNG Galaxy F62)
SAMSUNG Galaxy F62 இந்த ரக போன்களின் பட்டியலில் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் Exynos 9825 (7 nm) சிப்செட் கொண்டு இயங்குகிறது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உடன் இந்த ஸ்மார்ட்போன் விற்கபடுகிறது. இதில் 6.7″ அங்குல AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்னும் பெரிதாக 7000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Flipkartல் வெறும் 23,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Samsung Galaxy F23: ஸ்னாப்டிராகன் 750G புராசஸர்… சாம்சங்கின் புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்!
ரெட்மி 9 பவர் (Redmi 9 Power)
Redmi 9 Power ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனத்தின் இந்திய தளத்தில் இருந்து வெறும் 11,499 ரூபாய்க்கு வாங்கலாம். இதில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது. இது 6.53″ அங்குல எல்சிடி டிஎப்டி திரையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் 6000mAh பேட்டரியைக் கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது.
போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா… இத செஞ்சு பாருங்க!
பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உண்டு என்பது கூடுதல் சிறப்பு. மேலும், விலை நேரத்திற்கு ஏற்றபடி மாறுபடும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
போனுல பேட்டரி பிரச்னையா… இத அவசியம் படிங்க!