வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மத்திய அரசு துறைகளின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் குறைந்தபட்ச பதவி காலத்தை முடித்த அதிகாரிகளை ஜூன் மாதத்திற்குள் பணியிட மாற்றம் செய்யுமாறு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள்
இது குறித்து அனைத்து மத்திய அரசு துறை செயலர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில், ஒரு அதிகாரியின் பணிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் லஞ்ச ஒழிப்பு பிரிவில், 3 – 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அதிகாரிகளை மார்ச் 31க்குள் கண்டறியும் பணி முடிக்கப்பட வேண்டும். அவர்களை ஜூன் 30க்குள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
அதிகபட்சம்
ஒருவேளை குறைந்தபட்ச பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டி இருந்தால், அவரது பணித்திறன், நேர்மை உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்கலாம்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பே மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சேர்க்கப்பட வேண்டும். தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள், மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனின் ஒப்புதல் இன்றி மூன்றாண்டுகள் பணிக்காலத்தை முடித்த அதிகாரிகள் பணியில் தொடரக் கூடாது.இவ்வறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
Advertisement