இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் திங்கட்கிழமை 93 டாலரில் தாண்டி 94 டாலரை நெருங்கியது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறது. இதேபோல் தற்போது 5 மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 94 டாலரை நெருங்கியும் விலையை உயர்த்தாமல் வைத்துள்ளது.
3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
இதனால் தேர்தல் முடிந்த பின்பும் பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக நவம்பர் 4ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 81 டாலரில் இருந்து டிசம்பர் 1 ஆம் தேதி இதன் விலை 69 டாலர் வரையில் சரிந்தது. ஆனால் ஒமிக்ரான் மூலம் உருவான 3வது கொரோனா அலையில் பெரிய பாதிப்பு இல்லாத காரணத்தால் சில நாட்களிலேயே கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்து விலை அதிகரிக்கத் துவங்கியது.
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
இதேவேளையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் ஐரோப்பா மற்றும் பிரிட்டன் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாகக் கச்சா எண்ணெய் விலை 93 டாலராக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடை எச்சரிக்கை
இதுமட்டும் அல்லாமல் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவின் தலையீடு மற்றும் மேற்கத்திய நாடுகள் வர்த்தகத் தடை விதிப்பு எச்சரிக்கை காரணமாகச் சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது.
ரஷ்யா ஆதிக்கம்
ரஷ்யா உலகின் 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இருக்கும் நிலையில் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யாவின் ஆதிக்கம் மிகவும் அதிகம். இதனால் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் வர்த்தகத் தடை உலக நாடுகளின் வளர்ச்சியில் பெரும் தடையாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
12 டாலர் உயர்வு
சர்வதேச சந்தையில் நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 12 டாலர் அல்லது 15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பி நாடுகளுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாகவே உள்ளது.
இந்தியா
இந்தியாவில் தற்போது இருக்கும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச அடிப்படையில், அரசியல் அடிப்படையில் உள்ளது. 5 மாநில தேர்தலுக்குப் பின்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தால் கட்டாயம் அதிர்ச்சி அளிக்கும் விலையில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் அமைப்பின் பொருளாதார வல்லுனர் சுனில் குமார் சின்ஹா தெரிவித்தார்.
petrol, diesel prices may hit new high after 5 state elections
petrol, diesel prices may hit new high after 5 state elections 5 மாநில தேர்தலுக்குப் பின் காத்திருக்கும் அதிர்ச்சி.. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொடும்..!