லண்டன்: கொரோனா பாதிப்பால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பிரிட்டனின் மிகவும் பழமையான பப்பையும் கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை.
பொருளாதார சவால்கள் காரணமாக ஆயிரம் ஆண்டு பழமையான பப் மூடப்பட்டதாக அதன் உரிமையாளர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, பிரிட்டனின் பழமையான பப் பூட்டப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக அனைவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்கின்றனர். நிதி பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை, கொரோனாவின் தாக்கத்தின் ஆயிரக்கணக்கான சீரழிவுகளில் ஒன்றாகும்.
லண்டனின் வடக்கே செயின்ட் அல்பான்ஸில் அமைந்துள்ள ‘யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ்’ (Ye Olde Fighting Cocks) கி.பி 793 முதல் செயல்பட்டு வருவதாக பப்பின் இணையதளம் கூறுகிறது.
ALSO READ | Number 13: எண் ‘13’ என்றாலே அஞ்சும் உலகம்; காரணம் என்ன!
பொருளாதார சவால்கள்
‘CNN’ இன் அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோயால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பப் பெரும் நஷ்டத்தை சந்தித்தது, இதன் காரணமாக அது தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் தகவல் அளித்துள்ள அந்த பப்பின் உரிமையாளர் கிறிஸ்டோ டோஃபால்லி, பொருளாதார நெருக்கடி காரணமாக பப்பை மூடும் முடிவை எடுக்க நேரிட்டதாக கூறியுள்ளார். எதிர்காலத்தில், சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால், மதுபான விடுதியை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
தோல்வியடைந்த முயற்சிகள்
‘நானும் எனது குழுவும் பப்பை நடத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்தோம், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோட்டல் துறையில் ஏற்பட்ட கொரோனாவின் தாக்கம் மிகவும் சவாலானது.
தற்போதைக்கு பப்பை நடத்த முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இந்த பப் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, மரியாதைக்குரிய விஷயமாக தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
ALSO READ | ராணி எலிபெத்திற்கு பிறகு கோஹினூர் வைரம் யாரிடம் செல்லும்?
மோசமாக இருந்த விஷயங்கள் படுமோசமாகிவிட்டன
கொரோனா தொற்றுநோயால் பிரிட்டனின் பப் துறை ஏற்கனவே சிக்கல்களை எதிர்கொண்டிருந்தாலும், இப்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
பெரும்பாலான பப் உரிமையாளர்களுக்கு செலவுகளை நிர்வகிப்பது கடினமாகிவிட்டது. 2008 முதல் 2018 வரை 11000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Ye Olde Fighting Cocks pub இன் பிரதான கட்டிடம் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 19வது தசாப்தத்தின் பிற்பகுதியில், பிரிட்டனில் சேவல் சண்டை பிரபலமாக இருந்ததால், இந்த பப்பின் பெயர் ‘Ye Olde Fighting Cocks’ என்று மாற்றப்பட்டது.
கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்தது
‘Ye Olde Fighting Cocks’ இங்கிலாந்தின் பழமையான பப் என கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த சாதனையை இந்த பப் இழந்துவிட்டது.
‘Ye Olde Fighting Cocks’ உண்மையில் பிரிட்டனின் மிகப் பழமையான பப் என்ற தகவலை முழுமையாகச் சரிபார்க்க முடியாததால், 2000 ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகக்த்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை செய்தித் தொடர்பாளர் CNN ஊடகத்திடம் தெரிவித்தார்.
ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!